Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள திரையுலகில் நுழைந்த சிவாஜியின் பேரன்

10 நவ, 2021 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Legendary-actor-Sivaji-grandson-Dushyanth-debut-in-Malayalam-film

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் வாரிசு தான் துஷ்யந்த். கடந்த 2003லேயே ஹீரோவாக அறிமுகமான இவர் சக்சஸ், மச்சி என இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். அவை சரியான வரவேற்பு பெறாத நிலையில் சில வருடங்கள் கழித்து தயாரிப்பாளராக மாறி ஒன்றிரண்டு படங்களை தயாரித்தார். இந்தநிலையில் தற்போது அஸ்த்ரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் துஷ்யந்த்.

“நீண்ட நாட்கள் கழித்து நடிப்புக்கு திரும்புவதால் மலையாள திரையுலகில் கால் வைப்பதுதான் சரி என தோன்றியது.. காரணம் அங்கே வில்லனாக நடித்தாலும் இரண்டு காட்சிகளில் வந்துபோகும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் பேசவைத்து விடுவார்கள். அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை எளிதாக கைப்பற்ற முடியும்.. அந்தவகையில் அவர்கள் சொன்ன கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டேன்” என்கிறார் துஷ்யந்த்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவுக்கு கிடைத்த புது அங்கீகாரம்சமந்தாவுக்கு கிடைத்த புது ... நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் - சூர்யா சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 நவ, 2021 - 04:36 Report Abuse
meenakshisundaram இங்கே தமிழ் பட உலகம் கொஞ்சம் இல்லே நிறையவே குழம்பி பொய் கிடக்கு .இதுலே முன்னுக்கு வர்றது ரொம்ப கயிஷ்டம் துஷ்யந்த் மலையாள தேசத்திலேனும் முன்னுக்கு வர வாய்ப்பிருக்கலாம் .மற்ற மொழிகளை கற்க தமிழன் முயல வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in