துல்கரின் சீதாராமம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஜன கன மன | பஹத் பாசில் தயாரிப்பில் நடிக்கும் தங்கல் நடிகர் | ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் |
தமிழ் சினிமாவில் ஷாலினி-ஷாம்லி சகோதரிகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்கள். இதில், ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்க்களம் என கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்தார். நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை தவிர்த்து விட்டார்.
அதன்பிறகு அவரது தங்கையான ஷாம்லியும் கதாநாயகியாக வீரசிவாஜி என்ற படத்தில் நடித்தார். என்றாலும் அவரால் ஷாலினி போன்று கதாநாயகியாக பிரகாசிக்க முடியவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஷாலினி-ஷாம்லி ஆகிய இருவரும் இணைந்து போட்டோ எடுத்துள்ளனர். அதை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.