Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்' பாரதி பாஸ்கரின் உருக்கமான பேச்சு

26 அக், 2021 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Bharathi-Baskar-thanks-to-all

பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. இந்நிலையில் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நட்சத்திர பேச்சாளரான பாரதி பாஸ்கர் அன்மையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பாரதி பாஸ்கர், 'மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளேன். உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. எல்லா மதங்களையும் கடந்து எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பிய கோவில் பிரசாதங்கள் மலை போல் குவிந்துள்ளது. உங்களுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். தமிழ் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. இரண்டாவது முறை கிடைத்த இந்த வாழ்க்கை இன்னும் அழகாக மாறியிருக்கிறது. முழுமையாக உடல்நலம் தேறி விரைவிலேயே மேடைக்கு வருவேன் என நம்புகிறேன். இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சிறு வார்த்தையில் நன்றி என இதை சொல்லிவிட முடியாது. மீண்டும் சந்திப்போம்' என உருக்கமாக பேசியுள்ளார்.
பாரதி பாஸ்கரின் உடல்நலம் முழுதாக குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவிடம் கெஞ்சும் டாக்டர் சீனிவாசன்வனிதாவிடம் கெஞ்சும் டாக்டர் ... வேட்டி சட்டையில் மாஸாக போஸ் கொடுக்கும் அஸ்வின்! வேட்டி சட்டையில் மாஸாக போஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
30 அக், 2021 - 03:24 Report Abuse
DARMHAR தங்களது உடல் நலம் தேறி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவநை பிரார்த்திக்கிறோம்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
29 அக், 2021 - 17:26 Report Abuse
Bhaskaran இறைவன் உங்களுக்கு பரிபூரண நலம் அளிக்க பிரார்த்திக்கிறோம்
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இரண்டாவது இன்னிங்ஸ்ல்லாம் ஒன்றும் வேண்டாம் சொற்பொழிவுகளை தவிர்த்து பேனாவை பிடியுங்கள் சகோதரி தங்கள் உடல் நலமே பொது நலமாக இருக்கட்டும் ஆடிப் பிறைபோல ஒருநாள் கkட்சி தருக நலம் விரும்பிகள் மகிழ்வார்கள்
Rate this:
RAJA RAJESWARI R - DINDIGUL,இந்தியா
27 அக், 2021 - 09:31 Report Abuse
RAJA RAJESWARI R அன்பான சகோதரியே உங்களை போன்ற நல்லவர்களுக்கு தமிழை தன் உயிராய் சுவாசிக்கும் நல் இதயத்திற்கு ஒன்றும் ஆகாது. .
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27 அக், 2021 - 09:08 Report Abuse
Bala Murugan இந்த வருட தீபாவளிக்கு உங்களுடைய பேச்சை கேட்க முடியாதா ? நலமாகி நல்லபடியாக வீடு வந்து சேருங்கள். கவனிக்க ஆட்கள் இருக்கிறார்களா ?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in