Tamil Cinema 2019

முதல் பக்கம் » செய்திகள்

2022 தமிழ் திரையுலகில் அதிக படங்கள் யார்

28 டிச,2022 - 20:08 IST
எழுத்தின் அளவு:

2022 தமிழ் சினிமாவில் அதிக படங்களில் பணியாற்றியவர்கள் யார் என்பதை பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்...

நடிகர்கள்

நடிகர்களை பொருத்தமட்டில் அசோக் செல்வன், அசோக் குமார், ஜெய் ஆகியோர் தலா 5 படங்களில் நடித்துள்ளனர்.

* அசோக் செல்வன் : 5 படங்கள் (சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம்)

* அசோக் குமார் : 5 படங்கள் (விடியாத இரவொன்று வேண்டும், பெஸ்டி, மாயத்திரை, 4554, தெற்கத்தி வீரன்

* ஜெய் : 5 படங்கள் (வீரபாண்டியபுரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல், குற்றம் குற்றமே)

நடிகை
நடிகைகளில் ஐஸ்வர்ய லட்சுமி அதிகபட்சமாக தமிழில் 5 படங்களில் நடித்துள்ளார். அவர் ‛‛புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி'' போன்ற படங்களில் நடித்தார்.

காமெடி
காமெடி நடிகர் யோகிபாபு காமெடியும், குணச்சித்ரமும் கலந்து 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர்

யுவன்
தமிழ் சினிமாவில் அதிகப்பட்சமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 10 படங்களுக்கு இசையமைத்து நம்பர் 1 இடத்தில் உள்ளார். அவர் இசையமைத்த படங்கள் : வீரமே வாகை சூடும், வலிமை, குருதி ஆட்டம், மாமனிதன், விருமன், நானே வருவேன், காபி வித் காதல், லவ் டுடே, எஜென்ட் கண்ணாயிரம், லத்தி.

* டி இமான் : 7 படங்கள்(எதற்கும் துணிந்தவன், யுத்த சத்தம், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை, கேப்டன், காரி, டிஎஸ்பி)

* ஜிப்ரான் : 7 படங்கள் (குகூள் குட்டப்பா, தேஜாவு, மஹா, டிரிக்கர், நான் மிருகமாய் மாற, பட்டத்து அரசன், டாணாக்காரன்)

* ஜிவி பிரகாஷ் : 6 படங்கள்(மாறன், விசித்திரன், செல்பி, ஐங்கரன், யானை, சர்தார்)

* சந்தோஷ் நாராயணன் : 6 படங்கள் (கடைசி விவசாயி, குலு குலு, பபூன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மஹான், அனல் மேலே பனித்துளி)

* இளையராஜா : 5 படங்கள் (மருத, அக்கா குருவி, மாமனிதன், மாயோன், கிளாப்)

* அனிருத் : 5 படங்கள் (பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம்)

* சாம் சிஎஸ் : 5 படங்கள் (கார்பன், ராக்கெட்ரி, எண்ணித்துணிக, ரிப்பீட்டு ஷூ, சாணிக்காயிதம்)

* ஏ.ஆர்.ரஹ்மான் : 4 படங்கள் (இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்)

இயக்குனர்
இந்தாண்டு இயக்குனர் சுசீந்திரன் மட்டுமே இரண்டு படங்கள் இயக்கினார். படம்: ‛வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே'.



Advertisement
Advertisement

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement