விமர்சனம்
எஸ்.என் .அருணகிரியின் இசையில் , இளைய கம்பன் , கார்த்திக் நேத்தாவின் எழுத்தில் .,கோடம்பாக்கம் மறு பேரு ... , அதான் இதானு பார்த்தேன் ... , புட்டி, புட்டி ... உள்ளிட்ட பாடல்கள் பலே ராகம். பின்னணி இசைபரவாயில்லை ரகம். டி.கண்ணணனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு ஏற்ற பதிவு ,ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு ,ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கத்தில் கேரவன் கள் கவருகின்றன .
கணபதி பாலமுருகனின் எழுத்து , இயக்கத்தில் சில பேரு , ஒய்ப் இல்லாம கூட இருப்பான் ... ஆனா ஒய் - பை இல்லாம இருக்க வே மாட்டான் ... என்பது உள்ளிட்ட எண்ணற்ற ரைமிங் - டைமிங் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது படத்திற்கு பலம் .
இந்த வயதிலும் கவுண்டரின் டயலாக் டெலிவரியையும் மாடுலேஷனையும் பார்த்து மெய்சிலிர்க்கிறது ரசிகர் கூட்டம் . அதே நேரம், இந்த வயதிலும் அவருக்கு டான்ஸும் , பைட்டும் ... எதற்கு ? எனும் கேள்வி எழாமலும் இல்லை . இயக்குன் கணபதி பாலமுருகன் நினைத்திருந்தால் ., இவற்றைக் குறைத்திருக்கலாம்!
மற்றபடி., காதலர்களின் கலப்புத் திருமணத்திற்கு உதவி செய்யும் கேரவன்கிருஷ்ணனின் கதையாக ., சமூக அவலங்களுக்கு எதிரான சட்டையர் படமாக வந்திருக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தை எல்லாத் தரப்பினரும் பாரக் கலாம் .,கவலை மறந்து சிரிக்கலாம் , சிந்திக்கலாம்!
ஆக மொத்தத்தில் , எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - கவுண்டருக்கும் அவரது காமெடிக்கும் நிகர் கிடையாது!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!