‛இசைக்குயில்’ உடன் ‛டின்னர், போட்டோ’: வாசகர்களே ரெடியா...


வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா. தேனில் பாலையும் சர்க்கரையையும் கலந்தால் எவ்வளவு தித்திப்பாக இருக்குமோ, அவ்வளவு தித்திப்பானது இவரின் குரல். அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய இசைக்குயிலுக்கு நவ.,13ல் ரசிகர்களால் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ளவும், சுசீலா உடன் சேர்ந்து இரவு உணவு விருந்து சாப்பிடவும், போட்டோ எடுக்கவும் வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது தினமலர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதில் உடன், உங்களின் பெயர், மொபைல் எண் மற்றும் முகவரியுடன் அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 நபர்கள் மட்டுமே அவருடன் விருந்து சாப்பிட, போட்டோ எடுக்க முடியும். விரைவில் இடமும், நேரமும் அறிவிக்கப்படும்.

போட்டி நிறைவுபெற்றது.