டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், இளம் ஹீரோ நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'. அதிதி ராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப்படத்தில் சுதீர்பாபு இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த செப்-5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. தனது படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் உறுதியாக இருந்த தயாரிப்பாளர் தில் ராஜு, ஒரு கட்டத்தில் 35 கோடி ரூபாய்க்கு ஓடிடி தளத்திற்கு இந்தப்படத்தை கொடுத்தார்.
அப்போது ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை இந்தப்படம் பெற்றது. தற்போது திரையரங்குகள் செயல்பட துவங்கியுள்ள நிலையில் இந்தப்படத்தை தியேட்டர்களிலும் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். வரும் ஜனவரி-1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டமாக இந்தப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.