நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, தொடுபுழா அருகில் உள்ள மலங்கரா அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தார். இது மலையாள திரையுகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, சில மாதங்களுக்கு முன் வெளியான, 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக படம் முழுதும் வலம்வந்த இவரது நடிப்பை பார்த்து வியந்த, ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்து வந்த 'பீஸ்' என்கிற படக்குழுவினர் இவரது மறைவால் கூடுதல் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.
காரணம் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், தனது நண்பர்களுடன் அனில் நெடுமங்காடு குளிக்க சென்றபோது இப்படி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தில் படம் முழுதும் வருகின்ற முழு நீள போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனில் நெடுமங்காடு. இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் நிலையில், அனில் நெடுமங்காடு இப்படி திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து போயுள்ளனராம் பீஸ்' படக்குழுவினர்.