மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தற்போதுவரை, தொடர்ந்து பிசியான கதாநாயகியாகவே வலம் வருபவர், அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் லால்ஜோஸ் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இதில் ஆச்சரியமாக, நகைச்சுவை நடிகர் சௌபின் சாஹிருக்கு ஜோடியாக அவரது மனைவியாக இந்த படத்தில் நடிக்கிறார் மம்தா.
இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க துபாயில் நடைபெறுகிறது. ஏற்கனவே இயக்குனர் லால்ஜோஸின் அரபிக்கதா மற்றும் டயமண்ட் நெக்லஸ் ஆகிய படங்களுக்கு, இதே அரபுநாட்டு பின்னணியில் கதை எழுதிய கதாசிரியர் இக்பால் குட்டிப்புரம், தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார். இந்த மாதமே துபாயில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.