மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் முதன்முதலாக இந்தியில் இயக்கி வரும் பைட்டர் என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதன்மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் விஜய் தேவரகொண்டா. அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை நடிகை சார்மி கவுர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரும் இதில் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி நடிக்கிறார் என ஒரு தகவல், சில நாட்களுக்கு முன் வெளியானது. அதாவது விஜய் தேவரகொண்டாவுக்கு தந்தையாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சுரேஷ்கோபி. இதை தொடரந்து பூரி ஜெகன்நாத் தரப்பில் இருந்து இந்த தகவலை மறுத்துள்ளனர்.