சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் தெலுங்கு நடிகர் சுனில்.. பிராமாண்ட படங்களின் இயக்குனர் ராஜமவுலி, சிறிய நடிகர்களை வைத்து சின்ன பட்ஜெட்டிலும் கூட, தன்னால் வெற்றிகொடுக்க முடியும் என நிரூபிப்பதற்காக, 2௦1௦ல் அவர் இயக்கிய 'மரியாத ராமண்ணா' படத்தில் ஹீரோவாகும் அதிர்ஷ்டம் சுனிலுக்கு கிடைத்தது. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சலோனி அஸ்வின். தமிழில் ஜித்தன் ரமேஷ் நடித்த மதுரைவீரன் படத்தில் இவர் நடித்துள்ளார்.
சுனில்-சலோனி ஜோடி அந்த சமயத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். இந்தநிலையில் தற்போது சுனில் கதாநாயகனாக நடித்துவரும் படம் ஒன்றில் நாயகியாக சலோனியை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். சலோனியை பொறுத்தவரை, 2௦16க்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளே இல்லை.. ஆனால் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் 'மரியாத ராமண்ணா ஜோடி' என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படத்திற்கு பிசினஸ் பார்க்கலாம் என இந்த முடிவை எடுத்துள்ளார்களாம் படக்குழுவினர்.