சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கடந்த 2௦19ல் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம்தான் 'ஒரு அடார் லவ்'. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, முன்னோட்டமாக வெளியான ஒரு பாடலில் தனது புருவ சிமிட்டல்களால் உலக அளவில் பிரபலமானார் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரியா பிரகாஷ் வாரியர்.. இவருக்காகவே இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் படத்தின் கதையும் பிரியா வாரியரின் மோசமான நடிப்பும் ரசிகர்களை ஏமாற்றி படத்தையும் தோல்வியடையச் செய்தன
இந்த நிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பு கடந்த ஜூன் மாதம் பிரபல யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஆச்சர்யமாக இந்தப்படத்தை யூடியூபில் 5௦ மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.. சுமார் நான்கரை லட்சம் லைக்குகள் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளன. தெலுங்கில் டப்பிங் செயப்பட்ட, ஒரு சாதாரண மலையாள படத்திற்கு இது மிகப்பெரிய சாதனை என்கிறார்கள் தெலுங்கு திரையுலகினர்..