சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த பின்க் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அஜித் நடிக்க நேர் கொண்ட பார்வை என கடந்த வருடம் வெளியானது. ஹிந்தியில் இல்லாத மனைவி கதாபாத்திரத்தை தமிழில் புதிதாக உருவாக்கியிருந்தனர். அக்கதாபாத்திரத்தில் அஜித் மனைவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.
தமிழில் உள்ளதைப் போலத்தான் தெலுங்கு ரீமேக்கையும் உருவாக்கி வருகிறார்கள் என்று தகவல் உள்ளது. தமிழில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிக்க வைக்க பலரை அணுகினார்கள். கடைசியல் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில்தான் நடிக்கப் போகிறார் என்றாலும் முழு கதாநாயகியாக நடிப்பதற்கு என்ன சம்பளமோ அதைத் தயாரிப்பாளர் தருகிறாராம். சில முன்னணி நடிகைகள் கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தாலும் ஸ்ருதிஹாசன் நடிக்க சம்மதித்த காரணத்தால் அவருக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறதாம்.