சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
2021 ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கான இந்தியாவின் பரிந்துரை பட்டியலில் மலையாளப் படமான ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று (நவம்பர் 25) அறிவித்துள்ளது.
டைரக்டர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் 2019 ம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான படம் ஜல்லிக்கட்டு. எழுத்தாளர் எஸ்.ஹாரிஸ் எழுதிய மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. கேரளாவின் கிராமம் ஒன்றிற்குள் நுழையும் காட்டு எருமை அந்த கிராமத்தில் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் மற்றும் அழிவுகளை மையக் கருவாக கொண்டு எடுக்கப்பட்டது தான் ஜல்லிக்கட்டு படம்.
இந்த படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும், 24 வது புஷன் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, அனைவரின் வரவேற்பையும் பெற்றது. தற்போது இந்த படம் பிராந்திய மொழி படங்கள் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவரும் இயக்குனருமான ராகுல் ரவாலி கூறுகையில், மனித இனம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், அவர்களின் உண்மை உணர்வுகளையும் அப்படியே எடுத்துக் காட்டி உள்ளது இப்படம். இதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் இடங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக நாங்கள் கருதியதால் இப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.