சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
மலையாளத்தில் நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர், மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இரண்டு படங்களிலும் இவர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகள் முன்னணி இடத்தை பிடித்தனர் என்பது தெரிந்த வரலாறு. இதனால் இவர் படத்தில் நடிப்பதற்கு இப்போதும் புதுமுகங்கள் வாய்ப்புக்காக முண்டியடிக்கின்றனர். இந்தநிலையில் அல்போன்ஸ் புத்திரன் திடீரென ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது கடந்த சில நாட்களாக, தன் பெயரை கூறிக்கொண்டு, ஒரு நபர், சில சினிமா நடிகைகளுக்கும் வேறு சில பெண்களுக்கும் போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக குறிப்பிட்டுள்ள அல்போன்ஸ் புத்ரன், அந்த நம்பரில் தானே தொடர்பு கொண்டபோது, தன்னிடமே அந்த மோசடி பேர்வழி அல்போன்ஸ் புத்ரன் பேசுவதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.. மேலும், சம்பந்தப்பட்ட இரண்டு அலைபேசி எங்களை குறிப்பிட்டு, இந்த எண்களில் இருந்து, நான் பேசுவதாக யாராவது கூறினால், தயவுசெய்து அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், அல்லது அவர் மீது போலீஸில் புகார் அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்