மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், அதை மையமாக வைத்தே ஒரு கதையை உருவாக்கி, அதை நடிகை பார்வதி மற்றும் பிஜுமேனனிடம் சொல்லி ஓகே வாங்கினார் ஒளிப்பதிவாளர் ஷானு ஜான் வர்கீஸ். இவர் தான் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர். தான் இயக்குனராக மாறுவதற்காக, இவர் சொன்ன கதையை கேட்டு பார்வதி மற்றும் பிஜூமேனன், இன்னொரு முக்கிய நடிகரான ஷராபுதீன் மூவரும் உடனே கால்ஷீட் தர, கடந்த மாதம் தான் படப்பிடிப்பு துவங்கியது.
இந்த தகவலே கூட, சில நாட்களுக்கு முன்பு தான் வெளியான வேளையில், தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் மும்பையிலிருந்து கேரளாவுக்கு, ரயிலில் பயணிக்கும் ஒரு தம்பதி, எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இந்த படத்தின் மையக்கரு ஆகும்.