'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
தெலுங்கில் ரவிதேஜா நடித்த நிலா டிக்கெட் என்கிற படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் மும்பையை சேர்ந்த மாளவிகா ஷர்மா என்பவர். அதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் ரெட் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழில் வெளியான அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டபோது, யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா ஷர்மா.
அதாவது தனக்கு, பார்க்கும் பொருட்களை எல்லாம், யாருக்கும் தெரியாமல் எடுத்து, ஒளித்து வைத்துக் கொள்ளும், கிளப்டோ மேனியா என்கிற நோய் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் மாளவிகா அதேசமயம், தான் இதுவரை சின்னச்சின்ன பொருட்களாக மட்டுமே எடுத்ததாகவும், திருடியதற்காக இதுவரை யாரிடமும் பிடிபடவில்லை என்றும் கூறியுள்ளார் மாளவிகா.