மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சில நாட்களுக்கு முன்பு, ஜீத்து ஜோசப் டைரக்சனில் திரிஷ்யம் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த இரண்டு வாரங்களாக துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்தார் மோகன்லால். அங்கே ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்ததுடன், சொந்தமாக புதிய பிளாட் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதன்பிறகு கேரளா திரும்பி, திரிஷ்யம் 2 படத்தின் டப்பிங்கையும் பேசி முடித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஆராட்டு' என்கிற படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 23) துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் மோகன்லாலும் கலந்து கொண்டார். திரிஷ்யம் 2வை போலவே இந்த படமும் குறுகிய கால தயாரிப்பாக, அதேசமயம் ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாக இருக்கிறதாம்.