மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
செப்டம்பர் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து 46 நாட்களாக நடைபெற்ற த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார் மோகன்லால். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் துபாய் கிளம்பிச் சென்றார் மோகன்லால். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் கிளம்பிச் சென்ற வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியானது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது.
இந்த நிலையில் துபாயில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிகெட் இறுதிப்போட்டியை நேரில் கண்டு கொடுப்பதற்காகவே அவர் துபாய் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டியை கண்டுகளித்தபடி அங்குள்ள நிர்வாகிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
போட்டியை காண்பதற்காக மட்டும் அவர் செல்லவில்லை. அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல்., போட்டிகளில் புதிதாக ஒரு அணி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக மோகன்லாலும் இருப்பார் என கூறப்படுகிறது. அதன்காரணமாக அவர் துபாய் சென்றுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.