மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்து வந்த படம் 'தி பிரைஸ்ட்'. அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கும் இந்தப்படத்தில், மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இத்தனை வருடங்களில் மம்முட்டியுடன் இணைந்து இதுநாள்வரை நடித்ததே இல்லை என்கிற அவரது மனக்குறை இந்தப்படத்தில் தீர்ந்துள்ளது.. தவிர நிகிலா விமலும் இன்னொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.
திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தில் மம்முட்டி தனது போர்ஷனை ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்பே முழுவதுமாக முடித்து கொடுத்து விட்டார். அதனால் மஞ்சு வாரியர், நிகிலா விமல் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை மட்டுமே கேரளாவில் வாகமன் பகுதியில் கடந்த சில வாரங்களாக படமாக்கி வந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படக்குழுவினருடன் மஞ்சு வாரியர், நிகிலா விமல் ஆகியோர் உற்சாகமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.