Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

7 வார பிக்பாஸ் எபிசோடுகள் ; மூன்றே நாளில் பார்த்த சமந்தா

29 அக், 2020 - 18:51 IST
எழுத்தின் அளவு:
samantha-saw-7-week-bigg-boss-episodes-in-3-days

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 5௦ நாட்களை கடந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜுனா, அவர் நடித்துவரும் 'வைல்ட் டாக்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் அவரது மருமகளான நடிகை சமந்தா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்காலிக தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளதுடன், கடந்த சனி, ஞாயிறு எபிசோடுகளையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவதற்கு முன்னால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோட் கூட சமந்தா பார்த்தது இல்லையாம்.. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பு தனக்கு கிடைக்கப்போவதை அறிந்தவுடன், இதுவரை என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக, கிட்டத்தட்ட ஏழு வார எபிசோடுகளையும் மாரத்தான் ஓட்டம்போல மூன்றே நாட்களில் மொத்தமாக பார்த்து முடித்தாராம் சமந்தா.


இதுவரை ரியாலிட்டி நிகழ்ச்சி எதையும் தொகுத்து வழங்கிய அனுபவம் இல்லாத தனக்கு, தயக்கத்தையும் பயத்தையும் போக்கி, தன்னை நம்பி இந்த மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்த தனது மாமனார் நாகர்ஜூனாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சமந்தா..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவிதேஜா படத்தின் டப்பிங்கை துவங்கிய வரலட்சுமிரவிதேஜா படத்தின் டப்பிங்கை துவங்கிய ... சாய்பல்லவியை விடாமல் துரத்தும் நக்ஸலைட் சாய்பல்லவியை விடாமல் துரத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in