மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகை மஞ்சு வாரியார் 1995ல் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 1999 வரை கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்த மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு திரையுலகிலிருந்து ஒதுங்கினார். பதினைந்து வருட இடைவெளிக்கு பிறகு தனது கணவரிடமிருந்து, விவாகரத்து பெற்ற பின், மீண்டும் 2014ல் ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்தார் மஞ்சு வாரியார். இந்த ஆறு வருடங்களில் மளமளவென 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
தற்போது அவரது ஐம்பதாவது படமாக '9 எம்எம்' என்கிற படம் உருவாகிறது. விஜயதசமி நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மோகன்லால் வெளியிட்டார். நயன்தாரா நடித்து, கடந்த வருடம் வெளியான லவ் ஆக்சன் டிராமா படத்தை இயக்கிய தயன் சீனிவாசன் தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். அறிமுக இயக்குனர் டினில் பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். லவ் ஆக்சன் டிராமா படத்தை தயாரித்த காமெடி நடிகர் அஜு வர்கீஸ் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.