பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
தமிழில் ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மியா ஜார்ஜ். கடந்த மாதம் கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் மியா ஜார்ஜ்.. இதைத்தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்வார் என நினைத்தால், மீண்டும் சினிமாவில் முழு மூச்சாக இறங்கியுள்ளார் மியா ஜார்ஜ்.
அந்த வகையில் மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகும் சிஐடி ஷீலா என்கிற படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார் மியா. இந்த மோஷன் போஸ்டரில் ஒரு குடும்ப தலைவியாகவும், துப்பறியும் அதிகாரியாகவும் என இரண்டு கெட்டப்பில் காட்சி அளிக்கிறார் மியா. இந்த படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இறா என்கிற படத்தை இயக்கிய சைஜு என்பவர் தான், இந்த படத்தை இயக்குகிறார்.