பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
ஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர் மற்றும் மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் சரண்யா ஆனந்த். மோகன்லாலின் 1971 பியண்ட் பார்டர்ஸ் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். அதன் பிறகு சங்க்ஸ், மாமங்கம், ஆகாஷகங்கா 2, அச்சாயன்ஸ் மற்றும் கப்புசினோ படங்களில் நடித்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
தற்போது சரண்யா ஆனந்த் தனது நீண்ட நாள் காதலர் மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்ய இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டிலிருந்து சில படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சரண்யா, நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது: கடவுளின் கிருபையினாலும் ஆசீர்வாதத்தினாலும் இறுதியாக நான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது காதலர் ராஜாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் அவர் என்னை தன் ராணியாக்கி கொண்டார். என் மனதையும் திருடிவிட்டார். இறுதியாக என் வாழ்நாள் முழுவதும் நான் தொந்தரவு செய்ய விரும்பும் எனது சிறப்பு நண்பரை பெற்று விட்டேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அழகான கட்டத்திற்காக எங்களுக்காக பிரார்த்தியுங்கள். என்று எழுதி இருக்கிறார்.