மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
மலையாள நடிகர் சங்கமான அம்மா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனைத்து நட்சத்திரங்களையும் இணைத்து 'டுவென்ட்டி—20' என்கிற படம் ஒன்றை தயாரித்தது.. அதேபோன்ற ஒரு படத்தை மலையாள நடிகர் சங்க நிதிக்காக, மீண்டும் தயாரிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதுகுறித்து தகவலை சமீபத்தில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இடைவேளை பாபு என்பவர் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவரிடம், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளான நடிகை ஒருவர் நடிகர் சங்கத்தில் இருந்து விலகினாரே, அவரது பங்களிப்பும் இந்த படத்தில் இருக்குமா,,?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு “இறந்து போனவற்றை திருப்பி கொண்டுவரும் எண்ணம் நடிகர் சங்கத்திற்கு இல்லை” என்கிற அர்த்தம் தரும் விதமான வார்த்தைகளை பயன்படுத்தினார் இடைவேளை பாபு.
ஒரு நடிகை என்று கூட பாராமல் மோசமாக விமர்சித்த இவரது செயலுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக நடிகை பார்வதி தற்போது மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து இடைவேளை பாபு கூறும்போது, “நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு தவறான எந்த அர்த்தத்திலும் அப்படி கூறவில்லை.. பார்வதி நான் சொன்ன வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டுள்ளார்” என்று விளக்கம் அளித்துள்ளார்