பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
மலையாள திரையுலகில் டப்பிங் கலைஞராகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை பாக்கியலட்சுமி.. யூடியூப்பில் பெண்களை விமர்சித்து அநாகரிகமாக தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்த விஜய் பி.நாயர் என்பவரை பாக்கியலட்சுமியும் அவருடன் சேர்ந்து இரண்டு பெண்களும் சென்று தாக்கியதுடன், விஜய் பி.நாயரின் லேப்டாப் மற்றும் மொபைல் போனையும் அவரிடம் இருந்து கைப்பற்றி எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும் மொபைல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடி விட்டார்கள் என்றும் விஜய் பி.நாயர் கொடுத்த புகாரின் பேரில் பாக்யலட்சுமி மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிந்துள்ளனர் போலீசார்
இது குறித்து பாக்கியலட்சுமி கூறும்போது, “நம் நாட்டில் சட்டம் எல்லாமே, தவறு செய்யும் ஆண்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது.. யூட்யூப்பில் தொடர்ந்து விஜய் பி.நாயர் என்பவர் பெண்களை அநாகரீகமாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்தார். அவர் மீது போலீசில் நாங்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. அந்த கோபத்தில் தான், நாங்கள் அவரிடம் சென்று அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்து வந்தோம். அதுகூட, அவர் தன்னிடம் உள்ள அந்த ஆதாரங்களை மறைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.
அதன்பின் போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்தாலும் ஜாமினில் வரக்கூடிய சாதாரண வழக்காகத்தான் பதிந்தனர். ஆனால் அவர் தற்போது எங்கள் மீது தொடுத்துள்ள வழக்கில், எங்களுக்கு ஜாமீன் கிடைக்காதபடி வழக்கை பதிவு செய்துள்ளனர் போலீசார். பெண்களுக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் இவ்வளவு சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தாலும், ஏன் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மறுக்கிறார்கள்..? இந்தியாவிற்கு இது மிகப்பெரிய ஒரு சாபக்கேடு. இந்த வழக்கில் என்னை கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றாலும், எனது முகத்தை மூடாமல் கம்பீரமாக ஜீப்பில் ஏறி செல்வேன்” என்று கூறியுள்ளார் பாக்கியலட்சுமி