Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படத்தின் கதை பிரச்னை இழுபறிக்கு முடிவு

19 செப், 2020 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-Rendamoozham-story-issue-solved

மோகன்லால் நடிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத கதையை படமாக்க இருப்பதாக கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர்தான் இந்தப் படத்தையும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்திற்காக தனது 'ரெண்டமூழம்' நாவலை கொடுத்த பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ஒரு கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தன்னிடம் செய்த ஒப்பந்தப்படி, இந்தக்கதையை மூன்று வருடங்களில் படமாக்கவில்லை என்றும், அதனால் இந்த படத்திற்கு தன்னுடைய கதையை கொடுப்பதில்லை என முடிவெடுத்துவிட்டதாகவும் கதையை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த பிரச்சனை காரணமாக இந்தப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார் தயாரிப்பாளர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வழக்கில் தற்போது இயக்குனருக்கும் கதாசிரியருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி ரெண்டமூழம் கதையை வாசுதேவன் நாயரிடமே ஸ்ரீகுமார் மேனன் திருப்பிகொடுத்து விடுவது எனவும், இந்த கதைக்காக தனக்கு கொடுக்கப்பட்ட 1.25 கோடி ரூபாயை எம்.டி.வாசுதேவன் நாயர் திருப்பி கொடுத்து விடுவதும் என்றும் நீதிமன்றத்துக்கு வெளியே முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்மலையாள சின்னத்திரை நடிகர் திடீர் ... 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி அணியும் பிரித்விராஜ் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in