விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் 85 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. திலீப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திலீப் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைக்க முயற்சிப்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கை விசாரித்து வரும் போலீசார், அரசு வழக்கறிஞர் மூலம் வழக்கு நடந்த வரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் திலீம் நீதிமன்றத்தில நேரடியாக ஆஜர் ஆனார். போலீஸ் தரப்பு குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.