பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
மலையாளம் மற்றும் தமிழில நடித்து வந்த பிரபல நடிகையை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகர் திலீப் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பதாக அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் நடிகர் திலீபுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திலீபை கைது செய்தனர். 85 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் மூலம் சாட்சிகளை தொடர்பு கொண்டு, நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது என்று திலீப் மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திலீபின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க, சாட்சியத்தை கலைக்க முயன்ற வக்கீலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர் தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகு திலீபின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.