நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
காவலன், தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமார். இவருக்கு மொத்தம் நான்கு மகள்கள்.. இதில் மூத்த மகளான ஆஹானா கிருஷ்ணா என்பவர் தற்போது மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், யு-டியூப் வீடியோக்களில் ஆஹானா கிருஷ்ணாவும் அவரது மூன்று சகோதரிகளும் சேர்ந்து ஒரு புதிய சாதனையை செய்துள்ளனர்.
அதாவது ஒரு லட்சம் சந்தாதாரர்கள் என்கிற இலக்கை அடையும் நபர்களுக்கு வழங்கப்படும் சில்வர் பட்டன் என்கிற அங்கீகாரத்தை இந்த சகோதரிகள் நால்வரும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பெற்றுள்ளனர்.
இதுபற்றி நடிகை ஆஹானா கிருஷ்ணா கூறும்போது, “ஏற்கனவே யு-டியூப் சேனல் ஆரம்பித்திருந்தாலும் இந்த லாக்டவுன் சமயத்தில் தான் அதில் மீண்டும் ஆக்டிவாக செயல்பட துவங்கினேன்.. என்னை பார்த்து என் தங்கைகள் தியா, ஹன்சிகா மற்றும் இஷானி ஆகிய மூவரும் ஆளுக்கொரு யு-டியூப் சேனல்கள் ஆரம்பித்தனர்.. அவரவருக்கு விருப்பமான கான்செப்ட்டுகளில் வீடியோக்களை பதிவேற்றி வந்தோம். அவை பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், எங்கள் நால்வருக்குமே யூட்யூபின் முதல் அங்கீகாரமான சில்வர் பட்டன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.