Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் அரிய புகைப்படத்தை வெளியிட்ட சங்கீத் சிவன்

09 செப், 2020 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Mammottys-young-age-rare-photo-out

நடிகர் மம்முட்டிக்கு இருதினங்களுக்கு முன் பிறந்தநாள். திரையுலக பிரபலங்கள் பலரும், தாங்கள் மம்முட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, தங்களது வாழ்த்து மழையால் அவரை திணறடித்து விட்டனர். இந்தநிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான சங்கீத் சிவன், சற்று வித்தியாசமாக மம்முட்டிக்கு தனது வாழ்த்துச் செய்தியுடன், இதுவரை வெளியாகாத மம்முட்டியின் குடும்ப புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, மம்முட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இளம் வயது மம்முட்டி, தனது மனைவியின் மடியில் சாய்ந்தபடி இருக்க, அவரது வாரிசுகளான துல்கர் சல்மானும் அவரது சகோதரியும் உடன் அமர்ந்திருப்பது போன்ற அந்த புகைப்படம், இப்போதுதான் ரசிகர்களின் பார்வைக்கு முதல்முறை விருந்தாகியுள்ளது. இதுகுறித்து சங்கீத் சிவன் கூறும்போது, “மம்முட்டியுடன் இணைந்து நான் பணியாற்றா விட்டாலும், அவரை வைத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளேன்.. அப்படி என் மனதுக்கு நெருக்கமான ஒரு புகைப்படம் தான் இது” என கூறியுள்ளார்.

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவனின் சகோதரர் தான் இயக்குனர் சங்கீத் சிவன்.. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து யோதா என்கிற படத்தை இயக்கிய சங்கீத் சிவன், அதைத்தொடர்ந்து மம்முட்டி நடிக்கும் ஒரு படத்தையும் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டாராம். ஆனால் சில காரணங்களால் அந்த படம் ஆரம்ப கட்டத்திலேயே நின்று போனது என்று கூறியுள்ளார் சங்கீத் சிவன்.

மேலும், “ஒரு முறை நான், சென்னைக்கு விமான பயணம் மேற்கொள்ள இருந்தபோது அதை கேன்சல் செய்ய வைத்த மம்முட்டி, தனது புதிய காரிலேயே, என்னையும் சென்னைக்கு அழைத்து சென்ற அந்த இனிமையான அனுபவம் மறக்க முடியாதது. கேரளாவிலிருந்து சென்னை வரை தானே காரை ஓட்டிய மம்முட்டி, வழியில் தென்பட்ட நடைபாதை கடைகளில் இறங்கி, ஒரு சாதாரண மனிதனாக உணவருந்திய அவரது எளிமையை கண்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன்” என்றும் கூறியுள்ளார் சங்கீத் சிவன்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரில்லிங் கிளைமாக்ஸ் : சந்தோசத்தில் துல்கர் சல்மான்திரில்லிங் கிளைமாக்ஸ் : ... மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட அடம்பிடித்து அழுத 5 வயது சிறுமி மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in