மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கடந்த ஐந்து மாதங்களில் ஊரடங்கு அமலில் இருந்ததை போலவே, ஆச்சர்யமாக மலையாள நடிகர் திலீப் பற்றிய செய்திகளும் வெளியாகாமல் அடங்கியே இருந்தன. இந்தநிலையில் 'கலாசி' என்கிற புதிய படத்தில் திலீப் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி டைட்டில் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மித்தாலி ராஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.
கப்பல் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் கலாசி என்கிற தொழிலாளர்களின் வாழக்கை பின்னணியை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். அதேசமயம் ஆச்சர்யமாக இந்தப்பட அறிவிப்புக்கு முதல் நாள் தான், மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் 'மிஷன் கொங்கன்' என்கிற புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.. அந்தப்படமும் கலாசி தொழிலாளர்களை மையப்படுத்திய கதைதான் என்று சொல்லப்படுகிறது..