மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தெலுங்கு இயக்குனரும், பிக்பாஸ்- 2 புகழ் நடிகருமான நூடன் நாயுடு என்பவர் தனது வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வேலை பார்த்த ஸ்ரீகாந்த் என்பவரை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்து அவமானப்படுத்திய வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் என்கிற அந்த இளைஞர், தான் வேலையை விட்டு நிற்க போவதாக கூறியதால் ஆத்திரமடைந்த நூடன் நாயுடுவின் மனைவி, தன் வீட்டிலிருந்து ஸ்ரீகாந்த் செல்போன் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி, அதை விசாரிக்க வேண்டும் என கூறி, தனது வீட்டிற்கு வரவழைத்து வலுக்கட்டாயமாக அவருக்கு மொட்டை அடிக்க செய்துள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் அளித்த புகாரின் பேரில் தற்போது நூடன் நாயுடுவின் மனைவி மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நூடன் நாயுடு, அவர் மனைவி மற்றும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
நூடன் நாயுடுவின் மனைவியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு பயந்து கர்நாடகா மாநிலம் உடுப்பி பக்கம் சென்று தலைமறைவாக இருந்தார் நூடன் நாயுடு.. ஆனால் நீதிமன்ற உத்தரவு வெளியானதை தொடர்ந்து கர்நாடகா போலீஸார் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.