இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? |
மலையாள திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. இவரது மகள் டாக்டர் அனிஷாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நேற்று கொச்சியில் நடைபெற்றது. மணமகன் எமிலும் டாக்டர் தான். இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்ட மோகன்லால், இந்த நிகழ்வை தானே முன்னின்றும் நடத்தி கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மோகன்லாலின் வலது கை போல விளங்குபவர்.... மோகன்லால் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் அவரது நிழல் போல கூடவே இருப்பவர் இவர்..
தன்னிடம் கார் டிரைவராக உதவியாளராக சேர்ந்த ஆண்டனியை, ஆசீர்வாத் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி கொடுத்து, அவரை தயாரிப்பாளராக மாற்றி அழகு பார்த்தவர் மோகன்லால். அதனால் தான் அவரது மகள் நிச்சயதார்த்தத்தை தங்கள் வீட்டு விசேஷம் போல மோகன்லாலே முன்னின்று நடத்தியுள்ளார்.