டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
எண்பதுகளில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பூவிழி வாசலிலே, சூரியன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாபு ஆண்டனி.. தற்போது குணச்சித்திர நடிகராக நடித்துவரும் பாபு ஆண்டனி, சமீபத்தில் தனது குடும்பத்துடன் அமைதியான இடத்தில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தபோது பாபு ஆண்டனியின் மகன்கள், பறக்கும் கேமரா (ட்ரோன்) மூலம் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 50 அடி உயர மரத்தின் மேல் அது சிக்கிக்கொள்ள, மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் கைதேர்ந்தவரான பாபு ஆண்டனி, துணிச்சலாக மேலே மரத்தில் ஏறி அதை மீட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது பையன்கள் ட்ரோனை எடுப்பதற்காக மரத்தில் ஏற முயற்சித்தனர்.. ஆனால் கிட்டத்தட்ட 50 அடி உயர மரம் என்பதால், அவர்களை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு நானே மேலே ஏறி கேமராவை மீட்டு வந்தேன்.. நாற்பது வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மரத்தில் ஏறுகிறேன்.. சிறுவயதில் அணில்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு பழங்களை பறிப்பதற்காக என் வீட்டில் இருந்த மரங்களில் ஏறி விளையாடியதுண்டு.. ஆனால் என் மனைவி, பையன்களிடம் அதை சொன்னபோதெல்லாம் அவர்கள் நம்பவில்லை.. இப்போது நேரிலேயே பார்த்து ஆச்சர்யப்பட்டுபோய் அது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்” என கூறியுள்ளார் பாபு ஆண்டனி.