டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவியதற்கு காரணம் பாலிவுட்டில் நிலவும் நெபோடிசமும் அதனால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் தான் என சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் நிலவுவதாக நடிகை கங்கனா ரணவத்தும், தமிழ் சினிமாவில் நெபோடிசம் நிலவுவதாக சூப்பர் மாடல் என சொல்லப்படுகின்ற மீரா மிதுன் என்பவரும் நட்சத்திர வாரிசுகள் மீது, இப்போதுவரை தம்கட்டி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மலையாள திரையுலகில் பிரபல வாரிசு நடிகரான பஹத் பாசில், நெபோடிசம் குறித்த கேள்விக்கு, “நெபோடிசம் என்பது அர்த்தமற்றது என நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.. அவர் நடித்துள்ள 'சீ யூ சூன்' என்கிற படம் இன்று(செப்-1) ஒடிடியில் வெளியாகும் நிலையில், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் நெபோடிசம் குறித்து கேட்கப்பட்டதற்குத்தான் இப்படி ஒரு பதிலை அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னை விடுங்கள்.. நடிகர் பிரித்விராஜ், அறிமுகமான காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடித்து வருகிறார். கடுமையாக உழைக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அதிக நேரம் செலவழிக்கிறார்.. அந்த உழைப்பை நெபோடிசம் என்று சொல்வது அர்த்தமற்ற ஒன்று” என கூறியுள்ளார்.