ஆக.,11ல் ‛கோப்ரா' ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு | ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி | விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா | சந்திரமுகி 2 கை மாறியதா? | சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் எப்போது | நடிகைகளுக்கு மட்டும்தான் போட்டோ ஷுட்டா ? கலக்கும் கமல்ஹாசன் | தங்கை நிக்கி திருமணத்தன்று குழந்தை பெற்ற அக்கா சஞ்சனா | டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு இன்று டபுள் ரிலீஸ் | பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு நியாயமா - நிகிலா விமல் | என்ன சொல்கிறார் 'சூப்பர் குயின்' பார்வதி |
கடந்த சில தினங்களாக மோகன்லால் அடர்ந்த நீளமான தாடியுடன் கூடிய தோற்றத்தில் காணப்படும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தன. த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள மோகன்லாலின் புதிய கெட்டப் தான் இது என்று அதுகுறித்து யூகங்களும் பரவின. ஆனால் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-2வில் மோகன்லாலுக்கு இவ்வளவு நீண்ட தாடியுடனான கெட்டப் இல்லவே இல்லை.. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை” என்று மறுத்தார்.
இந்தநிலையில் தற்போது யூத் லுக்கில் உள்ள மோகன்லாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மலையாள திரைப்பட தயாரிப்பு நிர்வாகி பகதூர் என்பவர் நேற்றைய தினம் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பு துவங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் தாடியை எடுத்துவிட்டு மீண்டும் ஜார்ஜ்குட்டியாக மாற தயாராகிவிட்டார் மோகன்லால்.