பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களில் நாக சைதன்யாவும் ஒருவர். மகேஷ்பாபு, பிரபாஸ் போல அல்லாமல், நடிகர் நாகார்ஜுனாவின் மகன், சமந்தாவின் கணவர் என்கிற ரீதியில் தான் மற்ற மொழி ரசிகர்களுக்கு இவரை தெரியும். இந்தநிலையில் வரும் நவ-23ஆம் தேதி இவர் பிறந்தநாள் வருகிறது.. ஆனால் இன்னும் நூறுநாள் இருக்கும் நிலையிலே, நாக சைதன்யாவின் ரசிகர்கள் '100 டேய்ஸ் டூ சாய் பர்த்டே' என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இப்போதிருந்தே பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளார்கள்.
இது தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களை ரொம்பவே கோபப்படுத்திவிட்டது.. இதுகுறித்து பலரும் நாகசைதன்யா மீது கிண்டலான விமர்சனங்களையும் மீம்களையும் வெளியிட்டு வருகின்றனர்... அதில் ஒரு சிலர் “ஆக்சன் ஹீரோக்களுக்கே ஆறு நாளைக்கு முன்னாடி தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தையே துவங்கறோம்.. இவரு ஆஸ்கர் விருதையே அள்ளிட்டு வந்தவர் மாதிரி நூறு நாளைக்கு முன்னாடியே பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவங்குறது எல்லாம் ஓவர்.. அதுவும் இன்னைக்கு இருக்குற கொரோனா தாக்கத்துல இதெல்லாம் ஓவரோ ஓவர்” என கலாய்த்து தள்ளி வருகின்றனர்.