பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் |
கடந்த சில தினங்களாக மோகன்லால் அடர்ந்த நீளமான தாடியுடன் கூடிய தோற்றத்தில் காணப்படும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. ஏற்கனவே மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் அல்லவா..? அந்தப்படத்திற்கான மோகன்லாலின் புதிய கெட்டப் இதுதான் என்று தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் தற்போது இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம் படம் எங்கே முடிந்ததோ அதிலிருந்து சரியாக ஏழு வருடங்கள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.. ஆனாலும் த்ரிஷ்யம்-2வில் மோகன்லாலுக்கு இவ்வளவு நீண்ட தாடியுடனான கெட்டப் இல்லவே இல்லை.. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை” என்று கூறியுள்ளார்.
அதாவது த்ரிஷ்யம்-2 படத்தில் ஓரளவு தாடியுடன் தான் மோகன்லால் நடிக்கிறார் என்பதாலும் இந்த ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க இருந்ததால் அந்த சமயத்தில் படத்திற்கேற்றபடி ட்ரிம் செய்துகொள்ளலாம் என தாடியை வெட்டாமலேயே வளர்த்து வந்தாராம். ஆனால் அதுதான் இப்போது புது யூகங்கள் உருவாக காரணமாகி விட்டது என்றும் சொல்லப்படுகிறது.