Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டி படம் பார்ட்-2 ; ரகசியம் உடைத்த காமெடி நடிகர்

13 ஆக, 2020 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Big-B-sequel-secret-out

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே மம்முட்டியின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களுக்கு அதன் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அந்தவகையில், ஏற்கனவே 2005ஆம் ஆண்டு வரை நான்கு பாகங்களாக வெளியாகிவிட்ட 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' படத்தின் ஐந்தாம் பாகம், கொரோனா தாக்கம் முடிவுக்கு வந்ததும் மம்முட்டி நடிக்கும் முதல் படமாக துவங்கப்பட இருப்பதாக அதன் கதையாசிரியர் எஸ்.என்.சுவாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேபோல மலையாளத்தில் கடந்த 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'பிக் பி'.. கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிலால் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. அதுபற்றிய எந்த அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில் அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டதாகவே ரசிகர்களால் கருதப்பட்டது.

இந்தநிலையில் முதல் பாகத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜாபர் இடுக்கி என்பவர், இந்த இரண்டாம் பாகத்தில் அவரும் இடம் பெற்றுள்ளதாகவும், தானும் மம்முட்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகள், கொரோனா தாக்கத்திற்கு முன்பாகவே படமாக்கப்பட்டு விட்டன என்றும் சமீபத்திய பேட்டியில் கூறி சஸ்பென்சை உடைத்துள்ளார். அந்தவகையில் சத்தமில்லாமல் 'பிக் பி பார்ட்-2' வளர்ந்து வரும் செய்தி மம்முட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷ்யம் 2வில் புதிய லுக்கில் மோகன்லால்த்ரிஷ்யம் 2வில் புதிய லுக்கில் ... த்ரிஷ்யம்-2வில் மோகன்லால் கெட்டப் இது இல்லை ; ஜீத்து ஜோசப் மறுப்பு த்ரிஷ்யம்-2வில் மோகன்லால் கெட்டப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in