Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குழப்பத்தில் ராஷ்மிகா பட தயாரிப்பாளர்

13 ஆக, 2020 - 07:29 IST
எழுத்தின் அளவு:
Rashmika-movie-producer-still-under-confusion

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற நாயகி ராஷ்மிகா மந்தனா. அதற்கு முன்பே கன்னடத்தில் இவர் நடிக்க ஒப்புக் கொண்ட படம் தான் 'பொகரு'. துருவ் ஷார்ஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, ராஷ்மிகா டப்பிங் பேச வேண்டியது மட்டும் தான் பாக்கி. ஆனால் ராஷ்மிகா அதற்கு நேரம் ஒதுக்காமல், என் சொந்த ஊரிலேயே வந்து நான் டப்பிங் பேசி தருகிறேன் என நாட்களை கடத்தி வந்தார்.

இந்தநிலையில் படத்தை ஒடிடியிலாவது ரிலீஸ் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்ட படத்தின் தயாரிப்பாளர், ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தி தெலுங்கிலும் இந்தப்படத்தை டப்பிங் செய்து ஒரே நேரத்தில் வெளியிடலாமா என்று திட்டமிட்டு வருகிறாராம்.

ராஷ்மிகா நடித்திருந்தாலும், படத்தின் ஹீரோ தெலுங்கு திரையுலகுக்கு பழக்கமில்லாத நடிகர் என்பதால் தெலுங்கில் வரவேற்பு கிடைக்காது என சிலர் பயமுறுத்துகிறார்களாம். இன்னும் சிலரோ, கேஜிஎப் படத்திற்கு கூட இப்படித்தான் சொன்னார்கள், ஆனால் அந்தப்படம் தெலுங்கில் வெளியானபோது நன்றாக ஓடவில்லையா என கூறி தைரியமூட்டுகிறார்களாம். இதனால் எந்த முடிவை எடுப்பது என குழப்பத்தில் இருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்-7க்கு தள்ளிப்போன த்ரிஷ்யம்-2 படப்பிடிப்புசெப்-7க்கு தள்ளிப்போன த்ரிஷ்யம்-2 ... த்ரிஷ்யம் 2வில் புதிய லுக்கில் மோகன்லால் த்ரிஷ்யம் 2வில் புதிய லுக்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in