பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மலையாள சினிமாவின் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி திரையுலகில் அடியெடுத்து வைத்து 49 வருடங்கள் ஆனதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அவர் முதன்முதலில் மலையாளத்தில் மிகச்சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த 'அனுபவங்கள்' பாலிச்சக்கல்' என்கிற படம் 1971ஆம் வருடம் இதே ஆக-6ஆம் தேதி தான் வெளியானது. அதன்பின் 1973ல் காலச்சக்கரம் என்கிற படத்தில் நடித்ததுடன் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்தவர், திருமணமும் செய்த பின்னரே மீண்டும், 1980ல் நடிப்பில் முழு நேரமாக கால் பதித்தார்.
இதுவரை 6 மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருதுகளும், 7 முறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, இரண்டு கௌரவ டாக்டர் பட்டங்கள் என ஏராளமான விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தக்காரரும் கூட.
ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா ஆகிய வரலாற்று படங்கள் மம்முட்டியின் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கற்கள்.. கிட்டத்தட்ட சினிமாவில் ஐந்து தலைமுறைகளை கடந்துவிட்ட மம்முட்டி, மாறிவரும் சினிமா சூழல் மற்றும் டெக்னாலஜிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதால் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக ஹீரோவாகவே நடித்து வருகிறார்.