‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழில் இந்த வருடம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடைபெறுமா என்பது சந்தேகம்தான். அந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாகத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கொரோனா தொற்று பயம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வீட்டை விட்டு எங்குமே வெளியில் வரவில்லை. அவரைப் போன்ற 60 வயதைக் கடந்த நடிகர்கள் கொரோனா தொற்று முழுவதுமாக ஒழிந்தால்தான் நடிக்க வருவோம் என்று சொல்லியதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அதனால், இந்த வருடம் தமிழில் பிக்பாஸ் நிகர்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது.
ஆனாலும், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றனவாம். ஏற்கெனவே, இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ படப்பிடிப்பில் நாகார்ஜுனா கலந்து கொண்டதாகத் தகவல். ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாம். அவர்களை 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்த பிறகுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்க உள்ளார்களாம். அதற்காக ரகசிய இடங்களும் தேர்வாகி அங்கு அவர்கள் அனுப்பப்பட்டுவிட்டார்களாம்.
இந்த சீசனுக்காகத் தயாராகியுள்ள பிக்பாஸ் வீடு அமைக்க மட்டும் 3 கோடி செலவு செய்துள்ளார்களாம். மேலும், இந்த சீசனில் போட்டியாளர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என நாகார்ஜுனா தனிப்பட்ட வேண்டுகோளையும் வைத்துள்ளாராம். அடுத்த சில நாட்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்களின் விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது.