சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அடிக்கடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவது, அல்லது பிரச்சினையை ஏற்படுத்தும் கதைக்களங்களாகத் தேர்வு செய்து படமாக்குவது போன்றவைதான் ராம் கோபால் வர்மாவின் பொழுதுபோக்கு போலும்.
கொரோனா ஊரடங்கிலும் கூட 'க்ளைமாக்ஸ், நேக்டு' என்ற இரண்டு ஆபாசப் படங்களை எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ராம் கோபால் வர்மா. அதற்கு முன்னதாகவே ஆரம்பித்த பவர்ஸ்டார் என்ற படமும் தெலுங்கில் பிரபல ஹீரோவும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணைப் பற்றியது எனக் கூறப்படுகிறது. அப்படம் தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்களால் பவன் ரசிகர்கள் ஆவேசமாகினர்.
இந்நிலையில் அடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி பற்றிய படத்தை இயக்க இருக்கிறாராம் ராம் கோபால் வர்மா. இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பற்றியும் படம் எடுக்க உள்ளார்.