வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
கொரோனா தாக்கம் காரணமாக தான் இயக்கிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் இயக்குனர் ராஜமவுலி.. இன்னொரு பக்கம் அவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்தநிலையில் அவரை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் தேஜாவுக்கும் தற்போது கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளதாம்.
நடிகர் ஜெயம் ரவிக்கு தமிழில் அறிமுகம் கொடுத்த, தெலுங்கு ஒரிஜினலான ஜெயம் படத்தை இயக்கியது இவர் தான். இந்த ஊரடங்கிலும் சும்மா இருக்காமல் கடந்த வாரம் வரை வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வந்தாராம் தேஜா. இதுதான் அவருக்கு கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ள அவரது திரையுலக நண்பர்கள், அவர் இதிலிருந்து விரைவில் குணமாகி வரவேண்டும் அவருக்கு நம்பிக்கை வாழ்த்துக்களையும் அளித்துள்ளனர்