மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இந்த வருடத்திய நியூயார்க்- இந்திய திரைப்பட விழா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நிவின்பாலி நடித்த 'மூத்தோன்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடித்ததற்காக நிவின்பாலிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் இதில் சிறுவன் வேடத்தில் நடித்த நடித்த சிறுமி சஞ்சனா திபுவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற விருதும் என இந்தப்படம் மொத்தம் மூன்று விருதுகளை அள்ளியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான இந்த படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியிருந்தார். கேரளா மற்றும் மும்பை பின்னணியில் அமைந்திருந்த இந்த படத்தின் கதைக்களமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிவின்பாலியின் கதாபாத்திரமும், இந்த படம் கமர்சியல் வெற்றிக்கு ஏற்ற படம் அல்ல என்பதையும், அதேசமயம் விருதுகள் பெறுவதற்கு தகுதியான படம் என்றும் நிரூபித்தது.
மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் ஹோமோசெக்சுவல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவின்பாலி. நிவின்பாலியின் நடிப்புக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும் என படம் வெளியானபோதே விமர்சகர்கள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.