பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கடந்த 2017ம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கு சம்பந்தம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையை 6 மாதத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இந்த வழக்கில் திலீப்பின் முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சுவாரியர், நடிகை ரம்யா நம்பீசன் உள்பட பலர் சாட்சியம் அளித்தனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் இடையில் சில மாதங்கள் நீதிமன்றங்கள் பழையபடி செயல்பட முடியவில்லை. இதனால் திலீப் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. எனவே மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பி உள்ளார்.