Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கருக்கு வாழ்த்து சொல்ல நடிகையின் முயற்சி

31 ஜூலை, 2020 - 16:08 IST
எழுத்தின் அளவு:
Actress-try-to-wish-dulquer-salman

மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் பிறந்தநாளான நேற்று முன்தினம் அவரது ரசிகர்களும் திரையுலக நட்புகளும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலக பெண் நட்சத்திரங்கள் பலரும் துல்கருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டனர். ஆனால் ஆனந்தம் மற்றும் மந்தாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை அனார்கலி மரைக்கார் வாழ்த்து சொல்வதற்காக சற்றே வித்தியாசமான காரியம் ஒன்றை செய்துள்ளார்.

அதாவது துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இவர் விரும்பினாலும் அவருடன் இணைந்து இதுவரை புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையாம். அதனால் வாழ்த்து சொல்ல தயங்கியபடியே மற்றவர்கள் துல்கருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பொறாமையுடன் பார்த்தபடி இருந்தாராம். பலரும் இவரிடம் துல்கர் சல்மானுக்கு வாழ்த்து சொல்லவில்லையா என கேட்க ஆரம்பித்தனராம்.

இதனால் ஒரு முடிவுக்கு வந்த அனார்கலி தனது புகைப்படத்தையும் துல்கரின் போட்டோவையும் போட்டோஷாப்பில் ஒன்றாக இணைத்து ஒரிஜினல் படம்போல மாற்றி அதை வைத்து துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டாராம். துல்கர் சல்மானுடன் படத்தில் இணைந்து நடிக்கிறோமோ இல்லையோ கூடிய விரைவில் அவருடன் இணைந்து ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அனார்கலியின் தற்போதைய ஆசையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விபத்தில் பலியான மலையாள இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் வழக்கை சி.பி.ஜ விசாரிக்கிறதுவிபத்தில் பலியான மலையாள இசை ... கார் விபத்தில் கன்னட நடிகை படுகாயம் கார் விபத்தில் கன்னட நடிகை படுகாயம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in