Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு : கீது மோகன்தாஸ் பதில்

10 ஜூலை, 2020 - 15:39 IST
எழுத்தின் அளவு:
Geethu-Mohandas-replied-to-coustume-designer

நளதமயந்தி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ். ஏற்கனவே லயர் டயஸ் என்கிற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இவர் கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் மூத்தோன் என்கிற படத்தை இந்தி மற்றும் மலையாளத்தில் இயக்கினார். மலையாள திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் இவர் மலையாள நடிகர் சங்கத்திற்கு எதிராக, 2017ல் துவங்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.


இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த பெண்கள் அமைப்பில் இருந்து பெண் இயக்குனர் விது வின்சென்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி சேவியர் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதில் ஸ்டெபி சேவியர், இதே அமைப்பை சேர்ந்த பெண் இயக்குனர் ஒருவர், சம்பள பாக்கி கேட்டதற்காக தன்னை படத்தில் இருந்தே நீக்கினார் என்றும் இந்த அமைப்பில் உள்ள முன்னணி நடிகைகள் யாரும் தனக்கு நியாயம் கிடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அந்த இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டி இருந்தார்...


இந்தநிலையில் அந்த இயக்குனர் கீது மோகன்தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த சர்ச்சை பற்றி கீது மோகன்தாஸ் விரிவான பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நிவின்பாலி நடித்த மூத்தோன் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து ஆடைகளை வடிவமைத்தவர் மேக்சிமா பாசு என்பவர் தான்.. பிரசவத்திற்காக அவர் ஒய்வு எடுக்கவேண்டி இருந்ததால் அந்த பணிகளை ஸ்டெபி சேவியர் பார்த்து வந்தார். முதல் ஷெட்யூல் முடிந்ததும் அவர் நடந்துகொள்ளும் முறையிலும் அவரது வேலையிலும் திருப்தி இல்லை என சுமூகமாக கூறி அவரை நிறுத்திவிட்டேன்.


இவர் படப்பிடிப்பில் பயன்படுத்திய ஆடைகள் பலவற்றை யாருடைய அனுமதியும் பெறாமல் தனது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார்.. திருப்பி கேட்டபோது எனது சம்பள பாக்கியை கொடுத்தால் தான் அவற்றை தருவேன் என கறாராக பேசினார். பின்னர் தயாரிப்பாளர் மூலம் அது உடனடியாக செட்டில் செய்யப்பட்டது. ஆனால் அப்போது எந்த குற்றச்சாட்டும் கூறாமல் இத்தனை நாட்கள் கழித்து கூறுகின்றார் என்றால் அதில், எனக்கும், சினிமா பெண்கள் நல அமைப்புக்கும் மோசமான பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கம் அவருக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம்' என கூறியுள்ளார் கீது மோகன்தாஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல்மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு ... காமெடி நடிகருடன் இணைந்து பாடிய துல்கர் சல்மான் காமெடி நடிகருடன் இணைந்து பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in