Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல்

09 ஜூலை, 2020 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Kasaba-2-is-possible

கடந்த 2017ல் மம்முட்டி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த படம் 'கசபா'. வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் மலையாள படமும் இதுதான். படமும் நிதின் ரெஞ்சி பணிக்கர் என்கிற அறிமுக வாரிசு இயக்குனர் இயக்கிய இந்தப்படத்தில் ராஜன் சக்காரியா என்கிற மம்முட்டியின் போலீஸ் கதாபாத்திரம், தப்பு செய்தவர்களை தட்டிக்கேட்கும் கடமை உணர்ச்சி உள்ள ஆள் தான் என்றாலும், அவர் சக பெண் போலீஸ் அதிகாரிகளிடமும், பாலியல் தொழிலாளிகளிடமும் நடந்துகொள்ளும் விதம் மற்றும் பேசும் வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின..

பொறுப்பான நடிகரான மம்முட்டி, இப்படி மோசமான வசனங்களை பேசி, அநாகரிமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என்கிற குரல்கள் காவல் துறையிலிருந்தே வெளிப்பட்டன.. இது படத்தின் வெற்றிக்கு மைனஸாக அமைந்தது.. நடிகை பார்வதி இந்தப்படம் குறித்தும் மம்முட்டி குறித்தும் விமர்சித்து பேசியதால் தான், அவரது ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளானதுடன் மலையாள திரையுலகிலும் கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளானார்.

இந்தநிலையில் இந்தப்படத்தை தயாரித்த ஷோபி ஜார்ஜ் என்பவர், நான்கு வருடங்களுக்கு முன் இதே நேரத்தில் இந்தப்படம் தயாராகி வந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், “யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும், ராஜன் சக்காரியா (மம்முட்டி) மலையாள சினிமாவின் ராஜா தான்.. எல்லாம் ஒன்றாக கூடிவந்தால் ராஜன் திரும்பவும் வருவார்” என தனது பதிவில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை உணர்த்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும்தொடரும் வதந்திகளும் மறுநாள் ... ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு : கீது மோகன்தாஸ் பதில் ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in